உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிழக்கு சீமையிலே அஸ்வினி

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கிழக்கு சீமையிலே அஸ்வினி

கிழக்கு சீமையிலே, புதுப்பெட்டி பொன்னுத்தாயி, ராமன் அப்துல்லா, என்னவளே உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அஸ்வினி. பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே படத்தில் ராதிகாவின் மகளாக விக்னேஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். அதோடு டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்த போது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அஸ்வினி, தற்போது மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகிறார். குறிப்பாக சினிமா தவிர்த்து வெப் சீரியல்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வரும் அஸ்வினிக்கு ஒரு வெப் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !