நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது
ADDED : 397 days ago
தமிழில் உதயம், சகுனி, மாஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. கொரோனா காலகட்டத்தில் நிதின் ராஜூ என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு 2022ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்த மாதத்தில் தனது மகளின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடினார் பிரணிதா. அதோடு தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது தான் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் பிரணிதாவுக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.