உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தி கோட்' - முதல்நாளில் ரூ.126.32 கோடி வசூல்

‛தி கோட்' - முதல்நாளில் ரூ.126.32 கோடி வசூல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உலகம் முழுக்க தியேட்டர்களில் நேற்று வெளியாகி உள்ள படம் ‛தி கோட்'. விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு வேடத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரும் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தும் நடித்திருந்தனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் ரசிகர்கள் ஆதரவு நன்றாகவே உள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது.

தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகி உள்ள நிலையில் கோட் படம் முதல்நாளில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பாளரான ஏஜிஎஸ் அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூலும் 500 கோடியை தாண்டும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !