சித்ராவுடன் இணைந்து ஓணம் கொண்டாடிய பின்னனி பாடகிகள்
ADDED : 476 days ago
கேரளாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் ஓணம் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து இதை கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில் மலையாள பின்னணி பாடகர்கள் சங்கம் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஒன்றை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடத்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகி சித்ரா இதில் முன்னணி வகிக்க பல பின்னணி பாடகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில் மியூசிக்கல் சேர் அந்தாக்ஷரி உள்ளிட்ட பல வேடிக்கை விளையாட்டுக்களும் இசை தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டு மொத்த நிகழ்ச்சியும் கலகலப்பாக நடைபெற்றுள்ளது. ஓணம் பண்டிகையன்று இந்த நிகழ்ச்சி பிரபல மலையாள சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக இருக்கிறது.