ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது!
ADDED : 406 days ago
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வேட்டையன். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ‛மனசிலாயோ' என்ற பாடல் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகும் இந்த பாடலை, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛ஹூக்கும்' என்ற பாடலை எழுதிய சூப்பர் சுப்பு எழுதி இருக்கிறார். இது குறித்த தகவல் மற்றும் போஸ்டரை லைகா நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.