உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர்

தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர்

ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த வெப் தொடர் 'பஞ்சாயத்'. இதுவரை மூன்று சீசன்கள் வெளியாகி உள்ளன. அதிகம் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ்களின் பட்டியலிலும் இது இடம் பெற்றது. இந்த வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது ''தலைவெட்டியான் பாளையம்'. 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் அபிஷேக் குமார், சேத்தன் தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

மிகவும் பழமையான கிராமமான தலை வெட்டியான் பாளையத்திற்கு கிராம நிர்வாக அதிகாரியாக பணிக்கு வருகிறார் நாயகன் அபிஷேக் குமார். அந்த ஊரை மேம்படுத்த அவர் உழைப்பதும், கிராம மக்களின் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் அதற்கு தடையாக இருப்பதும் அதையும் மீறி அவர் எப்படி அந்த கிராமத்தை சீர்படுத்துகிறார் என்பதை காமெடியாக சொல்லும் தொடர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !