விபத்தில் சிக்கிய கார் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் ஜீவா
ADDED : 391 days ago
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் இளைய மகனான நடிகர் ஜீவா தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது பிளாக் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தனது தந்தையின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனது மனைவி சுப்ரியா உடன் காரில் பயணித்து வந்தார் ஜீவா. கள்ளக்குறிச்சி, கனியாமூர் அருகே கார் வந்தபோது குறுக்கே ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஜீவா அவரது மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.