மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வால்
ADDED : 391 days ago
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர ஹிந்தியில் முதல் முறையாக நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில் இதில் மற்றொரு நாயாகியாக காஜல் அகர்வால் நடிக்க தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.