உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படம் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் புதிய கார் வாங்கிய வெங்கட் பிரபு

கோட் படம் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் புதிய கார் வாங்கிய வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தி கோட்'. ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்த படம் முதல் நாளிலேயே 125 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் கோட் படம் திரைக்கு வந்த ஆறாவது நாளில் 312 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் பெரிய அளவில் இந்த படம் வசூலிக்கும் வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தற்போது கோட் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, ரேஞ்ச் ரோவர் என்ற புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் விலை 86 லட்சம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !