நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான்
ADDED : 394 days ago
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பல படங்களை இயக்கிய அட்லீ. ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, பிரியாமணி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியான இந்தப்படம் 1100க்கு கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் தற்போது ஜவான் படம் ஜப்பானில் வெளியாக தயாராகி வருகிறது. இதையடுத்து ஜப்பான் ரசிகர்களே ரெடியா? வருகிற நவம்பர் 29ம் தேதி ஜப்பான் நாட்டு திரையரங்கங்களில் ஜவான் படம் வெளியாக உள்ளது என்று இயக்குனர் அட்லி ஒரு போஸ்டர் மூலம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா இடம் பெற்றுள்ள அந்த போஸ்டரில் ஜப்பான் மொழியில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.