உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு

கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு

‛மிஸ்டர் எக்ஸ், கிரிமினல்' போன்ற படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக், அடுத்தபடியாக தினா ராகவன் என்பவர் இயக்கத்தில், ராஜூ முருகன் வசனம் எழுதும் தனது 19-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு நேற்று கவுதம் கார்த்திக் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படம் தென் சென்னை கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையில் உருவாகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதோடு இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !