உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது

விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் 8 நாட்களில் 332 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் தெரிவிக்கிறது. இப்போதுவரை பெரும்பாலான தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த வார இறுதியில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தில் சிம்ரன், சமந்தா, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும், எடிட்டராக பிரதீப் ராகவ்வும் தற்போது ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !