தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம்
ADDED : 400 days ago
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் 'ராமம் ராகவம்'. இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும் தன்ராஜ் மகனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை சிவபிரசாத் யானலா எழுதியிருக்கிறார்.
அப்பா, மகன் உறவை சொல்லும் படமாக , உருவாக்கப்பட்டிருக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் 'கொலசாமிபோல...' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக இருக்கிறது 'ராமம் ராகவம்'.