இயக்குனர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கல்வி நிதி வழங்கும் ஐஸ்வர்யா
ADDED : 395 days ago
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. 3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார். இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, நலிந்த இயக்குனர்கள் மற்றும் உதவி, இணை இயக்குனர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆண்டுக்கு 10 லட்சம் நிதி தருவதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
இதன் முதற்கட்டமாக 2024ம் ஆண்டிற்கான பங்களிப்பாக 5 லட்சத்தை சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார். செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து இதனை பெற்றுக் கொண்டனர்.