நடிகைகள் பற்றி அவதூறு : யு-டியூப்பர் காந்தராஜ் மீது ரோகிணி புகார்
ADDED : 396 days ago
சினிமா உலகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்கமான விஷயங்களை யு-டியூப் சேனல்களில் பேசி வந்தார். குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பலர் விபச்சார தொழில் செய்வதாகவும் கூறி அவர்கள் யார் யார் என்கிற விவரத்தையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காந்தராஜ் மீது நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் காந்தா ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பேச்சுகளை யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் ரோகிணி கூறியுள்ளார்.