இசை ஆல்பத்தில் நடித்த நிஹாரிகா
ADDED : 395 days ago
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இசை ஆல்பம் 'கடலோர கவிதை'. மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கி உள்ளார். தர்ஷன் மற்றும் நிஹாரிகா நடித்துள்ளனர்.
விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். இலை ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும், மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தன்னை நினைவூட்டுவதற்காக நிஹாரிகா இசை ஆல்பத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.