திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ்
ADDED : 471 days ago
பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், ஒரு பக்க கதை, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் என பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த மேகா ஆகாஷ், திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்திய சடங்கான மெஹந்தி நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வருங்கால கணவருடன் தான் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்.