உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு!

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு!


கடந்த 2020ம் ஆண்டு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்த படம் ‛மூக்குத்தி அம்மன்'. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கப் போவதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர். ஜே. பாலாஜி தற்போது திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கும் நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். சி இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாளை (செப்.,16) மாலை 6 மணிக்கு அப்படம் குறித்த ஒரு ஸ்பெஷலான அறிவிப்பை வெளியிடப்போவதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !