உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா

செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ என்கிற முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !