உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி

கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி


ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'வேட்டையன்'. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராணா, பஹத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ரஜினிக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து மனசிலாயோ என்கிற லிரிக் வீடியோ பாடல் வெளியானது.

இதற்கு முன்னதாக ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடுவதாக தெலுங்கு வரிகளில் வெளியான காவலா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல இந்த படத்தில் மலையாள வரிகளில் உருவான 'மனசிலாயோ' பாடலும் அதில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் மஞ்சுவாரியரின் நடனமும் ரசிகர்களை வசிகரித்துள்ளது.

தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீப நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் 'மனசிலாயோ' படத்தின் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் வேண்டுகோளுக்கிணங்க மனசிலாயோ பாடலுக்கு நடன வடிவமைத்த தினேஷ் மாஸ்டர் மீண்டும் நடன அசைவுகளை சொல்லிக்கொடுக்க அதன்படியே வேட்டி சட்டை அணிந்த ரஜினிகாந்த் நடனமாடும் காட்சி அவரது ரசிகர்களுக்கு ஓணம் விருந்தாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !