உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'?

மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'?

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தையும் அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என்ற அறிவிப்பு வந்தது.

ரஜினி படத்துடன் மோதுவதைத் தவிர்க்க விரும்பிய சூர்யா, படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துக் கொள்கிறோம் என்று பேசியிருந்தார். அதன்பின் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நவம்பர் 14ம் தேதி படம் வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பருவமழைக் காலம். புயல், மழை என இயல்பு வாழ்க்கையைப் பாதிக்க வைக்கும் அளவிற்க மழை பெய்யும். கடந்த சில வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. 'கங்குவா' படம் தமிழ்ப் படம் என்றாலும் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் மழை இருக்க வாய்ப்பில்லை என்றாலும் மழை வந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறையலாம். இதனால், வசூல் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !