பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்
ADDED : 384 days ago
தமிழில் மனோரமா போன்று மலையாளத்தில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் கலக்கியவர் கவியூர் பொன்னம்மா. 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் 'சத்யா' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சினிமா, சின்னத்திரை இரண்டிலுமிருந்து விலகி கொச்சியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்த வந்தார். 78 வயதான பொன்னம்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.