மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!!
ADDED : 439 days ago
தற்போது ‛டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1969' போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அதையடுத்து மலையாளத்தில் ‛டியர் ஸ்டூடண்ட்' மற்றும் தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ‛மூக்குத்தி அம்மன்-2' போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது மகன்களான உயிர், உலக்குடன் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் நயன்தாரா, தற்போது மை ஹார்ட் என்ற கேப்ஷனுடன் தனது மகனுக்கு அன்பு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. என்றாலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இந்த புகைப்படத்தில் இருப்பது உயிரா? உலக்கா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.