சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர்
ADDED : 383 days ago
பிரபல சினிமா நடிகை சுதா சந்திரன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கண்ணெதிரே தோன்றினாள்' என்கிற தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் ஸ்வேதா கெல்கே, ஜெய ஸ்ரீ, ஜீவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக மாளவிகா அவினாஷ் நடித்து வந்த ருத்ரா கதாபாத்திரத்தில் தான் தற்போது சுதா சந்திரன் என்ட்ரி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் சுதா சந்திரனின் பிறந்தநாளையொட்டி சீரியல் குழுவினர் அனைவரும் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.