காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி!
ADDED : 441 days ago
விஜய் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. சில திரைப்பட விழாக்களையும் அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார். இவரது காலில் ஏற்கனவே மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், சமீபத்தில் நான்காவது முறையாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ரஜினியின் வேட்டையன் படத்தின் இசை விழாவுக்கு அவர் வந்தபோது இரண்டு பேர் அவரை கைதாங்கலாகதான் அழைத்து வந்தார்கள். ஆனபோதும் தற்போது வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ என்ற பாடலில் ரஜினியுடன் இணைந்து மஞ்சுவாரியர் ஆடிய நடனத்தை ஆடி அது குறித்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடி.