கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி
குறிப்பாக மலையாள திரைப்படங்களில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க இளம் படைப்பாளிகளும் அவர்களுக்கு துணை நிற்க முன்னணி ஹீரோக்களும் தயங்குவதில்லை. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் நடிகர் மம்முட்டி தான் நடித்த புழு மற்றும் பிரம்மயுகம் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
எந்த அளவிற்கு என்றால் அடுத்ததாக பல வருடங்களாக வில்லனாக நடித்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்ற நடிகர் விநாயகன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் மம்முட்டி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெற்றி பெற்ற குறூப் படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவர். இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது.