கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி
ADDED : 388 days ago
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான சிரஞ்சீவி இன்னும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களின் வெற்றியைத் தாண்டி பத்மபூஷன், பத்ம விபூஷண், நந்தி விருது, பிலிம்பேர் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். இப்போது சிரஞ்சீவிக்கு மற்றொரு மகுடமாக கின்னஸ் சாதனை படைத்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில் சுமார் 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகள் செய்துள்ளார் சிரஞ்சீவி. இப்படி ஒரு சாதனையை செய்தமைக்காக உலகளவில் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு இவருக்கு கின்னஸ் சாதனை அளித்து அங்கீகரித்துள்ளது. ஐதராபாத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் பிரபல திரைக் கலைஞர்களும் பங்கேற்றனர்.