உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்'

மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்'

பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்துள்ள 'மெய்யழகன்' படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தணிக்கை முடிந்து அனைவரும் பார்க்கும்படியான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடம் ஓடக் கூடியதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் சில முக்கிய நடிகர்களின் படங்கள் இப்படியான சுமார் 3 மணி நேர நீளத்துடன்தான வெளியாகின்றன. சமீபத்தில் வெளியான விஜய் நடித்த 'தி கோட்' படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடம். கமல் நடித்து வெளியான 'இந்தியன் 2' படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்து, பின்னர் 12 நிமிடங்களைக் குறைத்தார்கள்.

கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ்ப் படங்களான, “கபெ ரணசிங்கம், சூப்பர் டீலக்ஸ், பிகில், மாஸ்டர்,' ஆகிய படங்கள் 2 மணி நேரம் 57 நிமிடப் படங்களாக இருந்தன. 'வலிமை' படம் 2 மணி நேரம் 58 நிமிடங்களாகவும், 'கோப்ரா', படம் 3 மணி நேரம் 1 நிமிடங்களாகவும், இருந்தன. 3 மணி நேரத்திற்கும் அதிகமான சில படங்கள் இதற்கு முந்தைய வருடங்களிலும் வெளிவந்துள்ளன.

படத்தின் நீளம் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, நேரம் போவது தெரியாமல் ரசிக்க வைக்கிறதா என்று மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !