சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?
ADDED : 375 days ago
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு, திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை தற்போது இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி அந்த படத்தை முடித்து விட்டு சூர்யாவுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.