சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி!
ADDED : 400 days ago
சின்னத்திரை ரியாலிட்டி
நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து
அந்த நிகழ்ச்சிகளின் சுவாரசியத்தை கூட்ட திரைபிரபலங்களை சீப் கெஸ்டாக
அழைத்த காலம் போய் அவர்களையே தொகுப்பாளராக களமிறக்கும் கலாசாரம்
உருவாகியுள்ளது. இந்நிலையில், ஜீ தமிழில் 'மகாநடிகை' என்கிற புதிய ஷோவை
அறிமுகப்படுத்த உள்ளனர்.
இது மற்றொரு தனியார் சேனலில் ஒளிபரப்பான
கதாநாயகி என்கிற நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி தான் என்றாலும், மகாநடிகை
ஷோவை நடிகர் விஜய் ஆண்டனி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பதால்
எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக
உள்ளது.