உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்து சர்ச்சைக்கு நிரந்தர முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

விவாகரத்து சர்ச்சைக்கு நிரந்தர முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா, ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திருமணத்தின் போது தனது கைவிரலில் அபிஷேக் பச்சன் அணிந்த மோதிரத்தை கழட்டி இருந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அதையடுத்து இந்த விவாகரத்து குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் மறுப்பு தெரிவித்திருந்தார் அபிஷேக் பச்சன்.

என்றாலும் அந்த செய்தி தொடர்ந்து பரவி வந்தது. அதனால் அந்த சர்ச்சைக்கு நிரந்தர முடிவு கட்டும் விதமாக தற்போது மீண்டும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்தபடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யாராய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !