தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்
ADDED : 410 days ago
நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீ-மேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு அவரது தந்தை விக்ரம் உடன் இணைந்து மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' எனும் படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகாசமுத்திரம், மங்களவாரம் போன்ற படங்களின் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் துருவ் விக்ரம் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.