இறுதிக்கட்டத்தை நெருங்கிய ரெட்ட தல படப்பிடிப்பு
ADDED : 409 days ago
மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக 'ரெட்ட தல' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் . கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசையமைக்கின்றார். காதல், ஆக்ஷன் கலந்த படமாக தயாராகிறது. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இப்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறதாம்.