உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் வேட்டையன் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது!

ரஜினியின் வேட்டையன் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது!

ரஜினி, அமிதா ப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில் இப்படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக இந்த படம் உருவாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !