உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி கோட்' 25வது நாளுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு

'தி கோட்' 25வது நாளுக்கு நன்றி சொன்ன வெங்கட் பிரபு


விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. தான் இயக்கிய நான்காவது படமான 'மங்காத்தா' படம் அஜித்துக்கே ஒரு திருப்புமுனையைத் தந்தவர் வெங்கட் பிரபு.

விஜய்யுடன் முதல் முறையாக இணைந்த 'தி கோட்' படத்திற்கான அறிவிப்பு வந்த போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். 'மங்காத்தா' போல ஒரு அதிரடி ஆக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களக்கு அதைவிட சற்றே குறைந்த ஒரு கமர்ஷியல் படமாகத்தான் 'தி கோட்' படத்தைக் கொடுத்தார்.

இன்றுடன் இப்படம் 25வது நாளை நிறைவு செய்கிறது. அதற்காக “கடவுள் கருணையானவர், எங்களது 'கோட்' படத்தை மெகா பிளாக்பஸ்டர் படமாகக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !