தோழியை சந்திக்க ஆலியா பட் வீட்டுக்கு விசிட் அடித்த ராதிகா
ADDED : 12 minutes ago
பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஹா என்கிற பெண் குழந்தையும் உண்டு. ரன்பீர் கபூரின் தாய் நீத்து கபூரும் முன்னாள் நடிகை தான். இவர் நடிகை ராதிகா சரத்குமாரின் நெருங்கிய தோழியும் கூட. இந்த நிலையில் சமீபத்தில் மும்பைக்கு சென்றிருந்த ராதிகா, ஆலியா பட்டின் வீட்டிற்கு விசிட் அடித்தார்.
அங்கே தனது தோழி நீத்து கபூரையும் ஆலியா பட்டின் மகள் ராஹாவையும் சந்தித்துள்ளார். தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் அங்கே சென்ற சமயத்தில் ஆலியா பட்டும் ரன்பீரும் வேறு வேலையாக வெளியில் சென்றதால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்பதையும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.