உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு எங்களுடையது : 'பத்ம பூஷன்' மம்முட்டிக்கு கமல் வாழ்த்து

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு எங்களுடையது : 'பத்ம பூஷன்' மம்முட்டிக்கு கமல் வாழ்த்து

2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை உலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அவர் செய்து வரும் சேவையை கவுரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மம்முட்டிக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மம்முட்டிக்கு தனது வாழ்த்துக்களை எக்ஸ் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பிரியத்திற்குரிய நண்பர் மம்முட்டி அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால் நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும், ஒருவரை ஒருவர் நேரடியாக விமர்சித்துக் கொண்டும் ஒரு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பை நீண்ட நாட்களாக பேணி வருகிறோம்.

நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்து கொண்டு இருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்முட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்முட்டி இப்போது பத்மபூஷன் மம்முட்டியாக இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !