சிறப்பு அழைப்பின் பேரில் புதுடெல்லி குடியரசு தின நிகழ்வில் உன்னி முகுந்தன் பங்கேற்பு
மலையாள திரை உலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கருடன் படத்தில் வில்லனாக நடித்த இவர் சமீப காலமாக தயாரிப்பாளராகவும் மாறி வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த வருடம் 100 கோடி வசூலித்த மார்கோ என்கிற ஹிட் படத்தில் நடித்த உன்னி முகுந்தன் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி பான் இந்திய படமாக உருவாகி வரும் மா வந்தே என்கிற படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கேரளா வந்தபோது பிரதமர் மோடியையும் உன்னி முகுந்தன் நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்தவர் தான். தற்போது பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் அவர் நடித்து வரும் நிலையில் இன்று டில்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் உன்னி முகுந்தனுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதை ஏற்று அவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள டில்லி சென்றுள்ளார்.