நண்பர்கள் அல்ல... குடும்பத்தினர் : மாதவன் தம்பதி குறித்து நயன்தாரா பெருமிதம்
நடிகை நயன்தாரா சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் கூட நடிகர்கள் பலருடன் நல்ல நட்புறவை பேணி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகை திரிஷாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா தம்பதியுடன் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை நயன்தாரா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் மாதவன் தம்பதி குறித்து நயன்தாரா குறிப்பிடும்போது, “எப்போதுமே என்னுடைய மிகவும் பேவரைட் தம்பதி இவர்கள்தான். அன்பு, நெருக்கம், உண்மையான உள்ளங்கள் எனது நல்ல விஷயங்கள் எல்லாமே ஒன்றாக இணைந்தவர்கள். ஒவ்வொரு முறை அவர்களை சந்திக்கும் போதும் நாங்கள் ஏதோ பல வருடங்கள் அவர்களை நன்கு அறிந்தவர்கள் போல உணர்கிறோம். அவர்கள் வெறும் நண்பர்கள் மட்டுமல்ல.. எங்களுடைய குடும்பம்” என்று கூறியுள்ளார்.