மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
343 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
343 days ago
சர்வதேச இந்திய திரைப்பட விழா (ஐபா) கடந்த 3 நாட்களாக அபுதாபியில் நடந்து வந்து. நேற்று இந்த விழா முடிவடைந்தது. இந்த விழாவில் சிறந்த தமிழ் படமாக 'ஜெயிலர்' தேர்வானது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படம் 9 விருதுகளை வென்றது.
9 விருதுகள்
சிறந்த நடிகருக்கான விருது 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்த விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது இதே படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கும் வழங்கப்பட்டன. பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை மற்றும் பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார். சிறந்த குணச்சித்ர நடிகருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தமைக்காக ஜெயராமிற்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பாடகராக ஹரிச்சரண், பாடகியாக சக்திஸ்ரீ கோபாலன், ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் மற்றும் கலை இயக்கத்திற்காக தோட்டா தரணி ஆகியோருக்கும் இப்படத்திற்காக விருது கிடைத்துள்ளது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் 2 படம் 9 விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த வில்லன் நடிகருக்கான விருது மார்க் ஆண்டனி படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஹிந்தி நடிகர் விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
சிறந்த படமாக ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வானது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 'மிஸஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே ' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார்.
சமந்தாவிற்கு சிறந்த பெண்மணி விருது
இந்திய சினிமாவின் சிறந்த பெண்மணி என்கிற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்பயணத்தையும் நடிப்பையும் பாராட்டும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.
343 days ago
343 days ago