உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்


பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தா இன்று (அக்.,1) அதிகாலை 4:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மேலாளர் சுஷி சின்ஹா கூறுகையில், ''இன்று கோல்கட்டா செல்வதற்காக கோவிந்தா தயாராகி கொண்டிருந்தார். அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது அதிலிருந்த குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !