உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி - சல்மான்கான் படத்தில் இணையும் கமல்ஹாசன்!

அட்லி - சல்மான்கான் படத்தில் இணையும் கமல்ஹாசன்!


ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக சல்மான்கான் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க போகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தக்லைப் படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன் அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து அட்லி இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார். இப்படத்தில் கமலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் பாலிவுட்டில் அவர் அழுத்தமாக கால் பதித்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக மெகா பட்ஜெட்டில் இயக்கப் போகிறார் அட்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !