நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நடிக்கும் 'மௌனம் பேசியதே' சீரியல்
ADDED : 377 days ago
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா, 'பூவே உனக்காக' சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு 'அருவி' என்ற சீரியலில் நடித்தவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'மௌனம் பேசியதே' என்ன தொடரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்த 'பூவே உனக்காக, அருவி' போன்ற தொடர்கள் தனக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், இந்த 'மௌனம் பேசியதே' தொடர் அதைவிட மிகப்பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தும். அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் ஜோவிதா.