உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் 2 தொடரில் நான் நடிக்க போவதில்லை - மதுமிதா பளீச்

எதிர்நீச்சல் 2 தொடரில் நான் நடிக்க போவதில்லை - மதுமிதா பளீச்

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் மக்களின் மனதை வென்று டாப் இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த மதுமிதாவுக்கு மிகப்பெரும் அளவில் பெயர் புகழ் கிடைத்து தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். எதிர்நீச்சல் -2 தொடருக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதிலும் மதுமிதாவே ஹீரோயினாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எதிர்நீச்சல் 2 வில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அ

வர் இன்று, (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள பதிவில், 'சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல் 2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !