உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி, பிரபு இணைந்து நடிக்கும் ராஜபுத்திரன்

வெற்றி, பிரபு இணைந்து நடிக்கும் ராஜபுத்திரன்

வெற்றி, தோல்வியை கடந்து தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் வெற்றி. தற்போது மகா கந்தன் இயக்கத்தில் 'ராஜபுத்திரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவருடன் நடிகர் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து கதைக் களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. நேற்று நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் நடிகர் பிரபுவை முன்னிலைப்படுத்தி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !