இரண்டாம் முறையாக இணையும் நானி, அனிரூத் கூட்டணி
ADDED : 384 days ago
தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கிறார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நானி நடித்த கேங் லீடர் படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தேவரா படத்தில் காப்பி விமர்சனங்களை தாண்டி அனிரூத் இசைக்கு கிடைத்த வரவேற்பால் இவரை ஓகே செய்துள்ளார். தொடர்ந்து நிறைய தெலுங்கு பட வாய்ப்புகளும் அனிருத்தை தேடி வரத் துங்கி உள்ளன. இதனால் இனி தெலுங்கிலும் அனிரூத் பிஸியாவார் என தெரிகிறது.