ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியானது
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‛பிரதர்' படம் தீபாவளி வெளியீடாக அக்., 31ல் ரிலீஸாகிறது. ராஜேஷ் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுதவிர ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'டாடா'. இவரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என இன்று போஸ்டருடன் அறிவித்துள்ளனர். தமிழக வரைபடம் வடிவிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் ஒரு பாதி முகம் கருப்பு, வெள்ளையிலும், மற்றொரு பாதி கலரிலும் உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.