அக். 7ல் வெளியாகும் பிளடி பெக்கர் டீசர்
ADDED : 377 days ago
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார். முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகி உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் 'பிளடி பெக்கர்'. இதில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கவினுடன் இணைந்து அக்ஷயா, ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.