ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்?
ADDED : 370 days ago
ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் இசை அமைப்பாளர் அனிருத் மூலமாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் நெல்சன் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛தேவரா' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க போகிறாராம். இதன்காரணமாக அடுத்தபடியாக நெல்சன், ஜெயிலர்- 2 படத்தை இயக்குவாரா? இல்லை ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.