சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்!
ADDED : 336 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் ‛தி கோட்'. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். சிவகார்த்திகேயன், திரிஷா போன்றவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்தார்கள். இந்நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் நடித்து முடித்ததும் சிவகார்த்திகேயனின் கையில் ஒரு காஸ்ட்லி வாட்ச் அணிகிறார் விஜய். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.